திறந்த கல்வி வளங்கள்

இ-பள்ளிக்கூடம் செயற்திட்டமானது, இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் கல்வி சார் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும் வண்ணம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகளிலே மேற்கொள்ளப்படும் கற்றல் கற்பித்தற் செயன்முறைகளுடன் தொடர்பான‌ ஆவணங்களைச் சேகரித்து, ஆவணப்படுத்தி அவற்றை இணையத் தளம் வழியாக பாடசாலை சமூகம் மற்றும் அனைவருக்கும் பயன்தரும் வகையில் வெளியிடுதல் எமது சமூகங்களின் கல்வி சார் முயற்சிகளுக்கு உறுதுணையாக அமையும். அவ்வகையில் நூலக நிறுவனம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் ஆவணப்படுத்தலின் ஓர் பகுதியாக பாடசாலைகளின் கல்வி வளங்கள் சார் ஆவணங்களைப் பெற்று அவற்றை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பாடசாலைக் கல்வியுடன் தொடர்பான வளங்கள் தற்சமயம் இணைய வடிவில் வெவ்வேறு தளங்களிலே சிதறிக் கிடக்கின்றன. அவற்றினை, அனுமதி பெற்று, நூலகச் சீர்தரங்களுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தி விபரித்து ஒரு தளத்துக்குக் கொண்டு வந்து, வகுப்பு ரீதியாகவும், பாட ரீதியாகவும் பகுத்து மாணவர்களின் பாவனைக்காக விடுவது இந்தச் செயற்றிட்டத்தின் ஒரு நோக்கமாகும்.

அனுசரணையாளர்கள்: